பெண் கொசு இத்தனைக் கொடுமையாகவா இருக்கும்?   இன்று உலகக் கொசு நாள்

பெண் கொசு இத்தனைக் கொடுமையாகவா இருக்கும்?   இன்று உலகக் கொசு நாள்

நம்மை கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் தான். ஆமாம்… ரத்தம் உறிஞ்சும் வேலையைச் செய்வது கொசுக்களில் பெண் மட்டும் தான். ஆண் கொசு சமர்த்து பிள்ளையாக பூக்களில் இருக்கும் தேனை மட்டும் தான் உறிஞ்சுகிறது. பெண் கொசுக்களுக்குத் தான் உணவாக ரத்தம் தேவைப்படுகிறது. 

இந்த விஷயத்தை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் டாக்டர் ரொனால்டு ராஸ். அப்போது இந்த தகவலைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட உலகம், அவர் நினைவாக ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்டு 20 ஆம் உலக கொசு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். 
ரத்தத்தை உறிஞ்சுவதால், இந்த பெண் கொசுக்கள் மூலமாக தான் மனிதர்களுக்கு மலேரியாக போன்ற நோய்கள் எல்லாம் பரவுகிறது என்பதையும் கண்டறிந்து சொன்னார். 
2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. இந்த 47 பற்களை வெச்சுக்கிட்டு தான் நம்ம உடம்புல ஊசி ஏத்துற மாதிரி துளைப் போட்டு ரத்தத்தை பெண் கொசுக்கள் உறிஞ்சுகின்றன. அதோடு கொசுக்களால் எத்தனை சின்ன இடைவெளியிலும் நுழைந்த வேகமாக மறக்க முடியும். எந்த அளவிற்கு என்றால், வேகமாக மழை கொட்டும் போதும் கூட தன்னுடைய உடலை நனைத்துக் கொள்ளாமல் மழைத் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடியும். 

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடித்துப் பறக்கிற கொசுக்களோட ஆயுள் காலம் சில வாரங்கள் மட்டும் தான். ஆனால், வருஷத்துக்கு கொசுக்களால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமாக 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இதுவரையில் 3000 வகைக்கும் மேலான கொசுக்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் 80 வகையான கொசுக்கள் தான் கொடூரமாக உணவுக்காக இரத்தத்தை உறிஞ்சுகிறது. கொசுக்களோட வாழ்நாள் காலம் மிக குறைந்தது என்பதால், முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு 5 நாட்கள் மட்டுமே ஆகிறது. தவிர, பிஞ்சியிலேயே பழுத்து, முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே, கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். வாழ்நாள் குறைவாக இருந்தாலும், இதனுடைய இனப்பெருக்கத்தின் வேகத்தால் நம்மால் பூமியிலிருந்து கொசுக்களை முற்றிலுமாக அழிக்க முடிவதில்லை. இதனால் தான் உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸ் கொசுவை அறிவித்திருக்கிறது. ஒரே ஆறுதல், பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது போல பெண் கொசுக்கள் அதிகமாக பெண்களையே கடிக்கிறது. காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் தான்!