பெண் குழந்தைகளின் கனவு பொம்மை பார்பிக்கு 60வது பிறந்த நாள் ! கனவு இல்லத்தில் தங்க புது செயலி !

 

பெண் குழந்தைகளின் கனவு பொம்மை பார்பிக்கு 60வது பிறந்த நாள் ! கனவு இல்லத்தில் தங்க புது செயலி !

பெண் குழந்தைகளின் அதிக வரவேற்பை பெற்ற பார்பி பொம்மைகள் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்குவதற்கு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் அதிக வரவேற்பை பெற்ற பார்பி பொம்மைகள் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்குவதற்கு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 

பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரசிகர்களுக்கு பார்பியின் கனவு இல்லத்தில் தங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

1959ல் அமெரிக்காவில் ரூத் ஹேண்ட்லர் என்பவரால் உருவா பார்பி பொம்மை பெண் குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. ஆரம்பத்தில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் சிறியனவாக இருந்ததால் இதை பார்த்த ஹேண்ட்லர் ஜேக் ரையான் என்ற பொறியாளரின் உதவியுடன் ஒரு பொம்மையை வடிவமைத்தார். அந்தப் பொம்மைக்கு பார்பி எ பெயரிட்டார். 1959 மார்ச் 9ஆம் தேதி நியூயார்க்கில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் பார்பி பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து பார்பி பொம்மைகள் உருவாகி  60 ஆண்டுகள் ஆகியும் விற்பனை குறையவில்லை. பார்பி பொம்மைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பெரிதும் கவர்ந்துள்ளது. சில ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக தங்கள் உடலையும் பார்பி பொம்மை போன்று உருமாற்றம் செய்துள்ளனர்.

barbie

தற்போது பார்பியின் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்கிச் செல்லும் வாய்ப்பு அளிப்பதற்காக படுக்கை அறைகள், தியான அறை, பொழுதுபோக்கு ஸ்டுடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த கனவு இல்லத்தில் தங்குவதற்கு Airbnb என்ற செயலி மூலம் அக்டோபர் 23 வரை விண்ணப்பிக்கலாம். ஒரு நாள் தங்க ரூ.4,272 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.