பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள்!

 

பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய  இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள்!

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி. இவர் தொகுதியில்  திரிப்ரையார் என்ற  பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்துள்ளது.

பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய  இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள்!

கேரளா: பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ போராட்டம் நடத்திய இடத்தை காங்கிரஸ் கட்சியினர் சாணத்தை ஊற்றி கழுவி  சுத்தம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நட்டிக்காரா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி. இவர் தொகுதியில்  திரிப்ரையார் என்ற  பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சாலையைச் சரிசெய்து தரகோரி அம்மாநில பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து அதிகாரிகள் சாலையை முறைப்படுத்தித் தருவதாகக் கூறிய பின்னரே போராட்டத்தை விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் எம்எல்ஏ கீதா கோபி போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள கீதா கோபி, தான் 
 பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். 

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால்  இந்த குற்றச்சாட்டை மறுக்கும் காங்கிரஸ் கட்சியினரோ, எம்எல்ஏ கீதா கோபிக்கு தொகுதி மக்கள் மீது அக்கறை இல்லை. அதைக் கண்டிக்கும் விதமாகவே இதைச் செய்ததாகக் கூறியுள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.