பெண் என்பதற்கு வேசி என்ற பொருளா? ஆக்ஸ்போர்டு அகராதியால் புது சர்ச்சை!!  

பெண் என்பதற்கு வேசி என்ற பொருளா? ஆக்ஸ்போர்டு அகராதியால் புது சர்ச்சை!!  

ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தைக்கு வேசி என பொருள் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.  எனவே அந்த அர்த்ததை மாற்றக்கோரி  30,000 க்கும் மேற்பட்டோற் கையெழுத்து மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆன்லைன் ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்(woman) என்ற வார்த்தையின் அர்த்தத்திற்கு பலவீனமானவள், வேசி என பெண்களை இழிவுப்படுத்தும் வார்த்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனை மாற்றக்கோரி  கடந்த ஜூலை மரியா பீட்ரைஸ் ஜியோவானார்டி என்ற பெண் கையெழுத்து மனுவை தொடங்கி பல பெண்களிடம் ஆதரவை திரட்டியுள்ளார். இந்த மனுவுக்கு செவி சாய்த்த 30, 000 க்கும் மேற்பட்ட பெண்கள் வார்த்தைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

women

பெண்களை இப்படி அர்த்தப்படுத்துவதால்தான் பெண்கள் பாலியல் பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் பெண்கள் முன்வைக்கின்றனர். மேலும் ஆண் என்ற வார்த்தைக்கு 25 அர்த்தங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் என்ற வார்த்தைக்கு வெறும் ஐந்து வார்த்தைகளே குறிப்பிட்டுள்ளனர். தேடு பொறிகளான கூகுள், பிங் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்களும் ஆக்ஸ்போர்டு அகராதியையே உரிமம் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே
இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த வார்த்தைகளை மாற்ற வேண்டும் என மனுவில் எழுதியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக மாற்றப்படும் என ஆக்ஸ்போர்டு அகராதி பதிலளித்துள்ளது.