பெண்மூலம்  நிர்மூலம்’ என்கிறார்களே… மூல நட்சத்திரத்தில் பெண்கள் பிறந்தால் தீமையா?

பெண்மூலம்  நிர்மூலம்’ என்கிறார்களே… மூல நட்சத்திரத்தில் பெண்கள் பிறந்தால் தீமையா?

பழமொழிகளின் பொருளை சிதைத்து, திரித்து பயன்படுத்துபவர்கள் சொல்லி வைத்த கட்டுக்கதை தான் மூல நட்சத்திரத்தில் பெண் பிறந்தால் தீமை என்பது. ‘ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம்  நிர்மூலம்’ என்பது தான் பழமொழி. இதற்கு, மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறோம். 

rasi

உண்மையில் ஆனி மூலம் அரசாளும்,பெண் (கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே இதன் பொருள்.அதாவது, ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்தே வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி. 

அதனால் தான் ஆனி மூலம் அரசாளும் என்ற பழமொழி  தோன்றியது. 
பெண் மூலம் நிர்மூலம் என்ற சொற்றொடருக்கு உண்மையான காரணம், கன்னி மாதம் என்று அழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும்  மூலம் நட்சத்திர நாள், அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். அதாவது, துர்காஷ்டமி அல்லது ஆயுத பூஜையோடு இணைந்து வருகிற நாள் அது. இந்த  நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கினாள் என்பதால் பெண் (கன்னி-புரட்டாசி) மூலம் நிர்மூலம் என்ற சொல் வழக்குத் தோன்றியது. 

kaani

இந்த பழமொழியின் உண்மையான பொருளை உணராமல், மூல நட்சத்திரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். இதே போலத் தான்  ‘தலைச்சனுக்கு தலைச்சன் ஆகாது’ என்ற சொல் வழக்கையும்  தவறாகப் புரிந்து கொண்டு தான் பல பெற்றோர்கள், தங்களது மகன், மகளின் திருமண வாழ்க்கையை அதீத பாசத்தால் பாழ்படுத்தி வருகிறார்கள். நல்ல வரன்களை எல்லாம் இதைக் காரணம் காட்டி, திருமணத்தைத் தள்ளிப் போட்டு, பிறகு வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.