பெண்ணுடன் தனிமையில் பேசியதைப் படம் பிடித்த நபரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..! திருவாடுதுறையில் பதட்டம்..!?

 

பெண்ணுடன் தனிமையில் பேசியதைப் படம் பிடித்த நபரை துப்பாக்கியால்  சுட்ட போலீஸ்..! திருவாடுதுறையில் பதட்டம்..!?

இதனால்,ஆத்திரமடைந்த மதி, போன வேகத்திலேயே உருட்டுக் கட்டையோடு திரும்பி வந்து ஜெகன் ராஜாவுடன் வாக்கு வாதம் செய்திருக்கிறார்.

ஆதீனத்தின் மெய்க்காப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்கள் ஆத்திரம் அடைந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குரு ‘மகா சந்நிதானமாக’ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி இருந்துவருகிறார்.இவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர் ‘ஜெகன்ராஜா’.நாகைப்பட்டினத்தில் ஏற்கனவே ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியவர்.

திருவாடுதுறை

ஞாயிற்று கிழமை  இரவு பத்து மணியளவில்,திருவாவடுதுறையில் உள்ள   பெட்டிக்கடை ஒன்றில் ஒரு பெண்ணுடன் காவலர் ஜெகன்ராஜா பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.அதைக்கவனித்த மதி என்பவர் தனது செல்போனில் சம்பந்தப்பட்ட இருவரையும் அவர்களுக்கு தெரியாமலே படம் பிடித்திருக்கிறார்.

இதை தற்செயலாகப் பார்த்த காவலர் ஜெகன்ராஜா,மதியின் செல்போனைப் பறித்துக்கொண்டு அவரை அடித்து விரட்டியுள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த மதி, போன வேகத்திலேயே உருட்டுக் கட்டையோடு திரும்பி வந்து ஜெகன் ராஜாவுடன் வாக்கு வாதம் செய்திருக்கிறார்.

திருவாடுதுறை

மதியின் வார்த்தைகளைக் கேட்டு டென்ஷானான ஜெகன்ராஜா,ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த  துப்பாக்கியால் மதியின் காலில் சுட்டுரிக்கிறார்.இருவரையும் சமாதானம் செய்து வைப்பதற்காக அங்கு வந்த அந்தக்  கிராமத்தின் நாட்டாமை,செல்வராஜ் என்பவரையும் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு கால்களிலும் துப்பாக்கிக் குண்டு துளைத்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து பின்னிரவில் துப்பாக்கி சப்தம் அடுத்தடுத்து கேட்டதில் அதிர்ச்சியான கிராமத்து மக்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு திரளாக  வந்திருக்கிறார்கள்.நிலைமை எல்லை மீறிப்போனதை உணர்ந்த ஜெகன்ராஜா, அப்பகுதி மக்களை மிரட்டும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன்,மதிவாணன் என்பவரையும் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

திருவாடுதுறை

இதனால்,கடுப்பான அவ்வூர் மக்கள் மக்கள் ஜெகன்ராஜாவின்  இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியிக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து, காயமடைந்த மதி,செல்வராஜ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்  கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலறிந்த குத்தாலம் போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அதனைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர்,துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன்,பதற்றத்தை தணிக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவாடுதுறை