பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை கட்டாயம் உருவாக்க வேண்டும்! போலீசாருக்கு மோடி வலியுறுத்தல்

 

பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை கட்டாயம் உருவாக்க வேண்டும்! போலீசாருக்கு மோடி வலியுறுத்தல்

பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை போலீசார் கட்டாயம் உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் புனேவில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் தொடர்பாக காவல்துறை இயக்குனர் ஜெனரல்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவதற்காக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு வந்தார். 

பிரதமர் மோடி

பிரதமர் மோடி அந்த கருத்தரங்கில் நேற்று பேசுகையில், பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழ்நிலையை போலீசார் கட்டாயம் உருவாக்க வேண்டும். பெண்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் உணர வைப்பதில் காவல்துறையின் பயனுள்ள பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்தார்.

பெண் மீது தீ வைப்பு

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் புகார் கொடுத்த பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களால் நாடே கொந்தளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.