பெண்கள் நுழைந்தால் கோயிலை மூடுங்கள்: பந்தள அரச குடும்பம் அதிரடி உத்தரவு

 

பெண்கள் நுழைந்தால் கோயிலை மூடுங்கள்: பந்தள அரச குடும்பம் அதிரடி உத்தரவு

பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றால் கோயிலை மூட தலைமை தந்திரிக்கு பந்தள அரச குடும்பம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்: பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றால் கோயிலை மூட தலைமை தந்திரிக்கு பந்தள அரச குடும்பம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்ட போது சன்னிதானம் செல்ல பெண் பக்தர்களும் வந்தனர். ஆனால் சில ஐயப்ப பக்தர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் அங்கு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு பெண் சன்னிதானம் சென்ற வீடியோ வெளியாகி வைரலாகியது. இதனையடுத்து நியூயார்க் டைம்ஸ் பெண் செய்தியாளரை ஐயப்ப பக்தர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர். இதேபோல் இன்றும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுதந்திரமாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஐயப்பன் சன்னிதானத்திற்கு பெண்கள் நுழைய முயன்றால் கோயிலை மூட வேண்டும் என தலைமை பூசாரியான தந்திரிக்கு பந்தள அரச குடும்பம் உத்தரவிட்டுள்ளது.