“பெண்கள் சமூகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள்” மம்தா பானெர்ஜி மகளிர் தின வாழ்த்து!

 

“பெண்கள் சமூகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள்” மம்தா பானெர்ஜி மகளிர் தின வாழ்த்து!

குடும்பத்திற்காக நாள்தோறும் பல தியாகங்களைச் செய்யும் பெண்களைப்  போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பெண்களின் நலன் மற்றும் அதிகாரத்தில் தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். மேலும் பெண்கள் தான் சமூகத்தின் தூண்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

குடும்பத்திற்காக நாள்தோறும் பல தியாகங்களைச் செய்யும் பெண்களைப்  போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, பெண்களின் நலன் மற்றும் அதிகாரத்தில் தனது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். மேலும் பெண்கள் தான் சமூகத்தின் தூண்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

mamta-banerjee-02

மேற்கு வாங்க மாநிலத்தின் நலத்திட்டங்களான ‘கன்யாஸ்ரீ’ மற்றும் ‘ரூபாஷ்ரீ’ ஆகியவற்றை நினைவு கூர்ந்த மம்தா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

சர்வதேச பெண்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள் கூறி ட்வீட் வெளிட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி. அதில் “பெண்கள் சமூகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள், உலகெங்கிலும் உள்ள எனது அம்மாக்களுக்கும், சகோதரிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார். 

ஸ்வஸ்திய சதி சுகாதார காப்பீட்டு அட்டைகள் பெண்களின் பெயரில் வழங்கப்படுகின்றன, பெண்கள் குடும்பத்தின் தலைவராக அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.