பெண்கள் இனி ‘மேக் அப்’ போடத்தான் இருக்கணும்-2.5 லட்சம் சிசிடிவி கேமராவுக்குள்  சென்னை- பெண்கள் பாதுகாப்பில் EPS பெருமிதம்

பெண்கள் இனி ‘மேக் அப்’ போடத்தான் இருக்கணும்-2.5 லட்சம் சிசிடிவி கேமராவுக்குள்  சென்னை- பெண்கள் பாதுகாப்பில் EPS பெருமிதம்

சென்னை பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு  பாதுகாப்பான இடமாக மாற்ற, மாநில அரசு  2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை சென்னை கார்ப்பரேஷன் எல்லைக்குள் நிறுவியுள்ளது, மேலும்  அனைத்து கார்ப்பரேஷன் பகுதிகளிலும் இன்னும் அதிகமான கேமராக்கள் நிறுவப்படும்  என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சனிக்கிழமை கூறினார்.

palanisamy

சென்னை: 1965 ஆம் ஆண்டில் இந்தி திணிக்கப்பட்டதை  எதிர்த்து  இறந்த தமிழ் மொழிபோர்  தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், அண்ணா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். உயர்ந்த பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றங்களைக் கண்டறிவதை எளிதாக்குவதற்கும், இரண்டாம் கட்டமாக மேலும் பல  சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும் என்றும்,  இந்த  திட்டங்கள் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

eedapadi

சட்டம் , ஒழுங்கு பிரச்சினையில்  தமிழகம்  நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக  மதிப்பிடப்படுகிறது, மேலும்   நிர்வாகத்திலும்   தமிழ்நாடு சிறந்துவிளங்குகிறது என  மத்திய அரசு  சமீபத்தில் கூறியது  என்று முதல்வர் கூறினார்.
“எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்டாலின் தமிழகத்தில்  உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து புகார் அளித்து வருகிறார்.

edapadi

திமுக ஆட்சியின் போது நிகழ்ந்த கொடூரமான அரசியல் கொலைகளையும், கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளையும் அவர் மறந்துவிட்டாரா? குற்றமே  இல்லாத இடம் உலகில் ஏதேனும்  இருக்கிறதா? தமிழ்நாடு  ஒரு அமைதியான மாநிலம்  மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்க்கு சிறந்த  இடமாகவும் இருக்கிறது   என்று முதல்வர் பழனிசாமி மேலும் கூறினார்.