பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலியை போக்கும் பனங்கருப்பட்டி

 

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலியை போக்கும் பனங்கருப்பட்டி

பனங்கருப்பட்டியில் அதிக அளவிலான இரும்புச்சத்தும், கால்சியமும் இருப்பதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது

கருப்பட்டி என்பது பனை நீரை காய்ச்சி செய்யப்படும் வெல்லம். இது நம் முன்னோர்களின் வலிமைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

பொதுவாக இது பெண்களுக்கே அதிக நன்மையை தருகிறது. பெண்கள் பருவம் வந்தது முதல் மாதவிலக்கு, மகப்பேறு என அனைத்து காலங்களிலும் பெண்களுக்கு பல நன்மையை செய்கிறது. இதனாலேயே இது பெண்களின் தோழி என அழைக்கப்படுகிறது.

பொதுவாக வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்பது அனைவரின் கருத்து.

உண்மையில் சர்க்கரை என்பது உடலுக்கு தேவையான ஒரு சத்துப்பொருள். அது அனைத்து உணவுகளிலும் நிறைந்து இருக்கும்.

வெள்ளை சர்க்கரையின் நிறம், வடிவத்துக்காக 30க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருள்கள்  சேர்க்கப்படுகிறது. 
இதன் காரணமாகவே, வெள்ளை சர்க்கரை உண்பதால் உடலுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக நாம் கருப்பட்டியை பயன்படுத்தலாம்.

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சரியான அளவில் பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலும் போகும்.

பனங்கருப்பட்டியில் அதிக அளவிலான இரும்புச்சத்தும், கால்சியமும் இருப்பதால் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

வைட்டமின் ‘பி” மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவமடைந்த பெண்களுக்கு உளுந்துடன் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுப்பதனால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் வலியை போக்கும்.

கருப்பட்டியில் பணியாரம் செய்து சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம்.

பணியாரம் மட்டுமில்லாமல் இனிப்பு பண்டங்கள் அனைத்திலும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. இதுபோல் இன்னும் எண்ணற்ற நன்மைகள் கருப்பட்டியில் நிறைந்துள்ளது.

கருப்பட்டியில் அல்வா:

அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான்.

ஆனால், இதில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதால் இது சக்தியில்லாத உடலுக்கு கேடான பண்டம் என்று பலரும் ஒதுக்குகின்றனர்.

இதில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியினை சேர்ப்பதனால் இது உடலுக்கு ஆரோக்கியமான தின்பண்டமாகிறது.

இதனை நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் காரணமாக இதனை மனமில்லாமல் தள்ளி வைப்பவர்களுக்கு இந்த கருப்பட்டி அல்வா ஒரு சிறந்த மாற்று. கருப்பட்டியில் செய்த அல்வா என்பதால் சுவையிலும் தனிசிறப்பு வாய்ந்தது.