பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவையா? அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இல்லையா?

 

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவையா? அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இல்லையா?

பெண்களின் பாதுகாப்பிற்கும், அவர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கும் அவர்கள் உடுத்தும் ஆடை தான் காரணம் என்ற எண்ண ஓட்டம் பல பேரிடம் இருக்கிறது. பெண்களுக்கு அவர்களுக்குரிய உடைகளை தாமே தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது.

சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்கும், அவர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கும் அவர்கள் உடுத்தும் ஆடை தான் காரணம் என்ற எண்ண ஓட்டம் பல பேரிடம் இருக்கிறது. பெண்களுக்கு அவர்களுக்குரிய உடைகளை தாமே தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது. ஆண்கள் முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்தால் அதை புரொஃபஷனல் என்று உயர்த்தும் சமுதாயத்தில், பெண்கள் விஷயத்தில் மட்டும் ஆடையைக் குறைப்பதுதான் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பெண்களையும், பெண்களின் உடலையும் வியாபார, விளம்பரக் காட்சிப்பொருளாக இந்த உலகம் மாற்றுகிறது. இது அடிமைத்தனம் என்று பெண்களுக்கும் புரிவதில்லை.

இது குறித்து மனநல நிபுணர் டாக்டர் ஷாலினியிடம் , பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவையா? அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இல்லையா? என்று கேட்டோம்.  அவர் கூறியதாவது:- ‘பெண்கள் பாலியல் துஷ்ப்ரயோகத்திற்கோ, துன்புறுத்தலோ இல்லை வன்புணர்வுக்கோ உண்டான பெண்கள் உண்மையிலேயே அன்று மோசமான ஆடை போட்டுட்டு இருந்தாங்களான்னு பார்த்தால் கண்டிப்பாக கிடையாது. சிறுகுழந்தைகள், மூதாட்டிகள்  வரைக்கும் எல்லா வயசு பெண்களும் வேற்றுமை இல்லாமல் பாலியல் துஷ்ப்ரயோகத்துக்கு உள்ளாக்குகிறார்கள். ஆனால்  எங்க பெண்ணினுடைய உடல், ஆடை முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்த பெண்ணினுடைய ஆடையை வடிவமைப்பது ஆண்கள். உதாரணமாக ஒரு டென்னிஸ் பிளேயர் இருக்காங்க. 

dresscode

ஆண் டென்னிஸ் பிளேயர் இருக்காங்க, பெண் டென்னிஸ் பிளேயர் இருக்காங்கன்னு பார்த்தீங்க ரெண்டு பேருக்கும் விதிமுறையெல்லாம் ஒன்றுதான்.அதே மாதிரி ஆடையும் ஒரேமாதிரி தானே இருக்கவேண்டும். ஆனால் நீங்க பார்த்தீங்கன்னா டென்னிஸ் ஆடுற பெண்கள் மட்டும் லோ-கட் போட்டு இருப்பாங்க. குட்டை பாவாடை போட்டு இருப்பாங்க. அவங்க குதிச்சி ஆடும் போது, அவங்க உள்ள போட்டு இருக்குற ஆடை வரைக்கும் தெரியுற மாதிரி தான் அவங்க ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை வடிவமைத்தது யாரு? செரீனா வில்லியம்ஸ் இல்ல. அதை அவங்களுக்கு ஸ்பான்சர் பண்ணுறவன் வடிவமைத்து இருக்கான். அவன் ஆணா பெண்ணான்னு பார்த்தா அவன் ஆண். எதற்காக அவங்க பாவாடையை தூக்கி தூக்கி வடிவமைக்குறாங்கன்னா, ஒரு பெண் செக்ஸியாக தான் ஆடட்டுமே. டென்னிஸ் ஆடுறாளோ இல்லையோ அவ ஆடும் போது அவளுடைய அசைவுகள் வைத்து ரசிச்சுக்கலாமேங்குற  எண்ணம் இந்த ஆண்களுக்கு இருக்கு.  அதனால் அந்த மாதிரியான உடைகளை அவங்க வடிவமைக்குறாங்க. 

girls

கொஞ்சம் அறிவுள்ள பெண், கொஞ்சம் சுயமரியாதை உள்ள பெண்கள் என்ன சொல்லுறான்னா, என் உடம்பா நீ எதுக்குடா பார்க்குற, எனக்கு காட்டணும் தோணுச்சுனா  நான் காட்டிட்டு போறேன். நீ என்ன காட்ட வைக்கிறது அது என் இஷ்டம் இல்லையான்னு சொல்லிட்டு அவங்க  அவளுடைய டிரெஸ் கோர்ட்டை  அவ மாத்திடுறாங்க. அந்த அளவுக்கு சுயமறியதாகி இருக்குற பெண்கள் தான் அவங்க டிரெஸ் கோர்ட்டை மாத்திக்குறாங்க.அதை நாம பாராட்டுகிறோம்.  ஆனால் இங்க சிறு குழந்தைகள் யாரை பார்த்து டிரெஸிங் பாலோ பண்ணுறாங்கன்னு பார்த்தீங்கன்னா சினிமா நடிகைகள் பார்த்து பாலோ பண்ணுறாங்க. அவங்க கிட்ட டான்ஸ் ஆடுன்னு சொன்னாலே டிரெஸ் தூக்கிட்டு தொப்பையை  காட்டிட்டு டான்ஸ் ஆடுவாங்க. ஏன்னா அது சாதாரணமாகி விட்டது. அப்படி கவர்ச்சியா நடனம் ஆடுனா தான் அவங்க கதாநாயகின்னு நம்புறாங்க. அப்போ அந்த கதாநாயகியின் உடையை வடிவமைக்குறது யாருன்னா அது அந்த படத்தோட டைரக்டர். டைரக்டர் என்ன சொல்லுறாரு, இந்த மாதிரி குட்டை டிரெஸ்  போட்டுட்டு டான்ஸ் ஆடத்தானே உனக்கு காசே குடுத்தேன்னு சொல்லுறாரு. பெண்ணோட ஆடையை முடிவு செய்யுறது யாருன்னு பார்த்தா அது ஆண். அதை அவன் தான் செய்யணுமா? இல்ல பெண் முடிவு எடுக்கணுமான்னு யோசிக்க வேண்டிய இடத்துல இருக்குறவ பெண். ஆனால் அதை பற்றி பெண்கள் யோசிக்குறது இல்லை. 

ஆண்கள் சொல்வதை கேட்டு அவ்ரங்க வடிவமைக்குற ஆடைகளை நாம போட்டோம்ன்னா, அவங்க நம்மள பராமரிப்பாங்க போலன்னு நினைக்குறாங்க. இவன் பார்த்துக்குறதுக்காக டிரெஸ் பண்ண சொல்லல,அவன் பார்த்துக்குறதுக்காக தான் டிரெஸ் பண்ண சொல்லுறான்னு பெண்களுக்கு தெரிவது இல்ல. இந்த விஷயத்தையும் பெண்களுக்கு விளக்க வேண்டியதா இருக்கு. தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் பெண்கள் மேலாடை அணிவதற்கு ஒரு தோல்சீலை போராட்டம் நடத்தி தான் அந்த ஆடையை அணியவேண்டியது இருக்கு. அதுக்கு முன்னாடி பெண்கள் அடையாயி அணியக்கூடாதுன்னு சொன்ன ஊரு நம்ம ஊரு. இங்க வந்து பெண்கள் ஆடை அணிவது என்பது அவங்க கம்பீரம், அவங்க சுயமரியாதை என்பதினால், கம்மியா போடுறதும், அதிகமாக போடுறதும் எங்க  விருப்பம் என்று பெண்கள் நம்பக்கூடாது. ஆண்கள் அவர்களை நம்ப வைத்தாலும், எந்த விஷயத்திற்காக உள்நோக்கத்திற்காக இப்படி செய்ய சொல்லுறாங்க என்று பெண்கள் சந்தேகத்தோடு யோசிக்க வேண்டியதாக இருக்கிறது’ என்றார்.