பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

 

பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த பெட்ரோல், டீசல் விலையற்றம் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை முடிந்த பின், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி ரூ.1.50 குறைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1 இழப்பை ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில் மாநில அரசும் விற்பனை வரியை குறைக்க கேட்டுக் கொள்வோம் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஆண்டு ஒன்றுக்கு 10,500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.