பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்ற ஆம்புலன்ஸ்: கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

 

பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் நின்ற ஆம்புலன்ஸ்: கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி!

அரசு ஆம்புலன்ஸில் துளசி அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. 

மயூர்பான்ஞ்:  கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில்  நின்றதால் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

odisha

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஞ் மாவட்டத்தில் உள்ள ஹன்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  சித்தாரஞ்சன் முண்டா – துளசி தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  பங்கிகிபோசி ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால்  நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 க்கு துளசியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அவரை அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அரசு ஆம்புலன்ஸில் துளசி அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் பாதி வழியிலேயே நின்றது. 

odisha

இதனால் திகைத்து போன ஆம்புலன்ஸ் டிரைவர் மாற்று ஏற்பாடு செய்ய முயன்றும் பலனளிக்கவில்லை. இதனிடையில் துளசி ஆம்புலன்ஸிலேயே பலியானார். அவர் வயிற்றிலிருந்த சிசுவும் உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.