பெட்ரோலை விஞ்சிய தக்காளி! விலையில் சதத்தை நெருங்கும் தக்காளி….

பெட்ரோலை விஞ்சிய தக்காளி! விலையில் சதத்தை நெருங்கும் தக்காளி….

எந்தவொரு பொருளும் விலை உயர்ந்தால் அதனால் முதலில் பாதிக்கப்படுவது முதலில் சாமானிய மக்கள்தான். அதனால் விலைவாசி கட்டுக்குள் இருக்க அனைத்து அரசுக்குள் நடவடிக்கை எடுக்கும். இல்லையென்றால் சாமானிய மக்கள் தங்கள் கோபத்தை தேர்தல் சமயத்தில் காட்டுவார்கள். உதாரணமாக வெங்காயம் விலை உயர்ந்ததால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்த நிலை நமக்கு தெரியும். அதனால எந்தவொரு ஒரு அரசும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்.

tomato

தற்போது நாட்டின் சில பகுதிகளில் பருவமழை நிலவரம் சரியாக இல்லை. அதேசமயம் வேளாண் விளைபொருட்கள் சப்ளை செய்யும் முக்கிய மாநிலங்களில் கனமழை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு காய்கறி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ தக்காளி ரூ80 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாதரண சமயங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.25 என்ற அளவில் விற்பனையாகும்.

tomato

ஒரே லிட்டர் பெட்ரோல் விலையை (சுமார் ரூ.74) காட்டிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சப்ளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் எகிறும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், வெங்காயம், வெண்டைக்காய் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறினர்.