பெங்களூருவில் காலரா பீதி… ரோட்டோரக் கடைகளை மூட உத்தரவு

 

பெங்களூருவில் காலரா பீதி… ரோட்டோரக் கடைகளை மூட உத்தரவு

இந்தியா முழுக்க கொரோனா பீதி நிலவ, கர்நாடக தலைநகர் பெங்களூரிலோ காலரா பீதி ஏற்பட்டுள்ளது. அங்கு 17 பேருக்கு காலரா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தெற்கு பெங்களூருவில் 8 பேருக்கும், கிழக்கு பெங்களூருவில் 7 பேருக்கும் காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் காலரா நோய் ஏற்பட்டுள்ளதால் சாலையோரக் கடைகளை மூடும்படி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா பீதி நிலவ, கர்நாடக தலைநகர் பெங்களூரிலோ காலரா பீதி ஏற்பட்டுள்ளது. அங்கு 17 பேருக்கு காலரா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தெற்கு பெங்களூருவில் 8 பேருக்கும், கிழக்கு பெங்களூருவில் 7 பேருக்கும் காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவு, கால்வாயில் உள்ள காலரா கிருமி ஈக்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவும். எனவே, பொது மக்கள் சுத்தம், சுகாதாரமான இடங்களில் உள்ள உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஈ மொய்த்த உணவுப் பொருட்கள், பழச்சாறுகளை அருந்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

roadside-food

மேலும், சாலையோரக் கடைகள் மூலமாக காலரா பரவும் அபாயம் உள்ளதால், நடைபாதை கடைகள், பானிபூரி, சாலையோர டிஃபன் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆரவைத்து அருந்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். காலரா தோற்று மேலும் யாருக்கும் பரவாமல் இருக்க மாநகரம் முழுவதும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.