பெங்களூரின் பிரபல “பப்”க்கு சீல் வைக்கப்பட்டது -அடுக்கணக்கான புகாரால் அதிரடி 

பெங்களூரின் பிரபல “பப்”க்கு சீல் வைக்கப்பட்டது -அடுக்கணக்கான புகாரால் அதிரடி 

பெங்களூரில் வசிக்கும் ஒரு குழு பெல்லந்தூரில் உள்ள BBMP க்கு சட்டமீறலில் ஈடுபடும்  21 நிறுவனங்களை பட்டியலிட்டு கடிதம் எழுதியிருந்தது.அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) அதிகாரிகள் குழுவால் சர்ஜாப்பூரில் உள்ள  ” Byg Brewski ” பப் மூடப்பட்டது.

bar-sealed

பிபிஎம்பியின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் விஜேந்திரா, நகரத்தில்  மிகப்பெரியது என கூறப்படும் ப்ரூபப், 30 அடி குறுகிய சாலையில் அமைந்துள்ளது, எனவே இது மண்டல விதிமுறைகளை தெளிவாக மீறுவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மூத்த சுகாதார அதிகாரியின் கூற்றுப்படி, 40 அடிக்குக் குறைவான அகலமுள்ள சாலையில் வணிக ஸ்தாபனத்தை கட்ட  முடியாது.

பெல்லந்தூர் குடியிருப்பாளர்கள்  பிபிஎம்பி இணை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் அப்பகுதியில் உள்ள 21 நிறுவனங்களை பட்டியலிட்டிருந்தது. இந்த நிறுவனங்கள் இரவில் உரத்த இசையை வாசிப்பது போன்ற விதிமுறைகளை மீறுவதாக குடியிருப்போர் குழு கூறியது. நிறுவனங்களின் வாடிக்கையாளர்களால் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் கூறினர்..
பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி பிபிஎம்பி குழுவுடன் சேர்ந்து பப் மூடப்படுவதை மேற்பார்வையிட்டார். 

“சர்ஜாப்பூர் சாலையில் வசிப்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்திய தி பைக் ப்ரூவ்ஸ்கி பப்பில் நடக்கும் முறைகேடுகள் பற்றி எனக்கு பல புகார்கள் வந்தன. இன்று நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்   நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்” என்று அரவிந்த் லிம்பாவலி ட்வீட் செய்துள்ளார்.