பூரி, சப்பாத்திக்கு மைக்ரோ அவனில் கிரீன் பீஸ் பனீர் மசாலா

 

பூரி, சப்பாத்திக்கு மைக்ரோ அவனில் கிரீன் பீஸ் பனீர் மசாலா

பச்சைப் பட்டாணியை பனீருடனே சேர்த்து மசாலா செய்யும் போது வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.

பச்சைப் பட்டாணியை பனீருடனே சேர்த்து மசாலா செய்யும் போது வாசமாகவும், சுவையாகவும் இருக்கும். பூரி, சப்பாத்தி, புரோட்டோ போன்ற ரொட்டி அயிட்டங்களுக்கு நல்ல காம்பினேஷன்.

தேவையான பொருட்கள்:

உரித்த பச்சைப் பட்டாணி – 1 கப்
பனீர் -சிறிய சதுரங்களாக நறுக்கியது  1 கப்
வெங்காயம் – நீளவாக்கில் நறுக்கியது 1
 தக்காளி – பொடியாக நறுக்கியது 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பச்சைப் பட்டாணியை தண்ணீர் தெளித்து மைக்ரோ –  ஹையில் 4 நிமிடங்கள் வைத்து எடுத்து உப்பு சேர்க்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு கிளறி மைக்ரோ – ஹையில் மூன்று நிமிடம் வைக்கவும்.

வெங்காயத்துடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு 1 நிமிடம் மைக்ரோ – ஹையில் வைக்கவும்.  தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வைக்கவும்.

அதனுடன் மிளகாய்த்துாள், கரம் மசாலா, மல்லித்துாள் சேர்த்து 2 நிமிடம் மைக்ரோ – ஹையில் மூடி வைக்கவும்.

அதனுடன் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரோ – ஹையில் 5 நிமிடம் வைக்கவும்.

இடையில் கிளறி உப்பு சேர்க்கவும்.  பனீர் சேர்த்து மூடாமல் மைக்ரோ – ஹையில் 2 நிமிடம் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.