பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு செயற்குழுவில் முடிவுகட்டிய விஷால் – வீடியோ

 

பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு செயற்குழுவில் முடிவுகட்டிய விஷால் – வீடியோ

தயாரிப்பாளர் சங்க அலுவலத்திற்கு பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை: தயாரிப்பாளர் சங்க அலுவலத்திற்கு பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு இன்று கூடியது. அக்கூட்டத்தில் சங்க துணைத்தலைவராக இருந்த கவுதம் மேனன் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய துணைத் தலைவராக பார்த்திபன் தேர்வு செய்யப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

parthiban

அதேபோல், கடந்த வாரம் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்திருப்பதாக சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும் என்றும் அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.