பூஞ்சியை இழந்துவாடும் தீபா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்! RIP பூஞ்சி!

 

பூஞ்சியை இழந்துவாடும் தீபா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்! RIP பூஞ்சி!

கம்மல் வேண்டுமா என மருத்துவர் கேட்க, உடனடியாக பூஞ்சிதான் வேண்டும் என குடும்பமே சொல்ல, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கம்மலை மீட்டெடுத்தனர். கம்மலை கண்டுக்காத தீபா, பூஞ்சியின் மேலே கவனத்தை வைத்திருந்தார். ஆனாலும், தீபா எதிர்பார்க்காதது நடந்துவிட்டது. RIP பூஞ்சி!

பறப்பதில் விமானத்தையும், மிதப்பதில் கப்பலையும் விட்டுவைக்காத அசைவப் பிரியர்கள் இருக்கும் இடத்தில்தான் தீபா மாதிரியான மென்மையான உள்ளத்தினரும் இருக்கிறார்கள். அதற்காக அசைவ பிரியர்கள் எல்லாம் கல்நெஞ்சக்காரர்களா என கொடிபிடித்து கிளம்பிவந்துவிடவேண்டாம். ஆஃபிஸ் முன்னாடி ட்ராஃபிக் ஜாம் ஆகிவிட்டால் சென்னையே பத்தி எரியும் பர்ருவால்லயா? சரி, தீபா விஷயத்துக்கு வருவோம். சென்னை புரசைவாக்கத்தில் சிவக்குமார், அவருடைய லதா, மற்றும் லதாவின் மகள் தீபா ஆகியோர் வசித்துவருகின்றனர். ஆசையாக பிராய்லர் கோழி ஒன்றை வாங்கி, பூஞ்சி என பெயரிட்டு ஆசைஆசையாக வளர்த்துவந்தார் தீபா.

Punchi's scan report

பூஞ்சியை பக்கத்தில் வைத்துக்கொண்டு, தீபா தலைவாரி கொண்டிருக்கும்போது, கழட்டி வைத்திருந்த அவரின் இரண்டு கம்மல்களை பூஞ்சி கண்ணிமைக்கும் நேரத்தில் கொத்தி விழுங்கிவிட்டது. இதுவே வேறொரு ஆளாக இருந்தால், உடனே மளிகை கடைக்கு ஓடிப்போய் மசாலா வாங்கிவந்திருப்பார்கள். தீபாவும் அதையே செய்திர்ருந்தால் அவர் ஏன் நம்ம செய்தியில் வரப்போகிறார்? பூஞ்சியை தூக்கிக்கொண்டு உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு விரைகிறார். பூஞ்சி வேண்டுமா? கம்மல் வேண்டுமா என மருத்துவர் கேட்க, உடனடியாக பூஞ்சிதான் வேண்டும் என குடும்பமே சொல்ல, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கம்மலை மீட்டெடுத்தனர். கம்மலை கண்டுக்காத தீபா, பூஞ்சியின் மேலே கவனத்தை வைத்திருந்தார். ஆனாலும், தீபா எதிர்பார்க்காதது நடந்துவிட்டது. RIP பூஞ்சி!