பூஜ்ஜியம் வாங்கினால் என்ன சுந்தர் பிச்சைகிட்ட பாராட்டை வாங்கிட்டாங்களே இந்த அம்மணி!

 

பூஜ்ஜியம்  வாங்கினால் என்ன சுந்தர் பிச்சைகிட்ட பாராட்டை  வாங்கிட்டாங்களே இந்த அம்மணி!

சரபினா நான்ஸ் என்ற மாணவி  சமீபத்தில் இயற்பியல் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்துள்ளார்.

தேர்வில் பூஜ்ஜியம் எடுத்த மாணவியைக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பாராட்டி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

sundar

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி செய்து வருபவர் சரபினா நான்ஸ் என்ற மாணவி  சமீபத்தில் இயற்பியல் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்துள்ளார்.

இதை சமூகவலைதள  பக்கத்தில் பதிவிட்ட  அவர், தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறமையை மதிப்பீடு அல்ல எனக்கு பிடிக்காத துறையை மாற்றி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் சிறந்து விளக்குகிறேன்; என்று   பதிவிட்டிருந்தார். 

 

இந்நிலையில் மாணவியின்  பதிவை கண்ட கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பதிலளித்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி  தலைகால் புரியாமல் பிரமித்துப் போயுள்ளார். இதையடுத்து  அந்த மாணவியின்  ட்வீட்டானது இணையத்தில் வைரலாகி வருகிறது.