பூக்கடை காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி..மாடியில் வசித்த டாக்டர் குடும்பமும் பாதிப்பு!

 

பூக்கடை காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி..மாடியில் வசித்த டாக்டர் குடும்பமும் பாதிப்பு!

அவர்களுடன்தொடர்பில்  இருந்த நபர்களை கண்டறியும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னையில், 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. சென்னையில் அதிகமாக மக்கள் சென்று வரும் பகுதியான கோயம்பேடு காய்கறி சந்தையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்களில் சந்தைக்கு வந்து சென்றவர்கள் என அனைவரும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். 

ttn

இந்நிலையில் சென்னை, பூக்கடை காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சாந்தி காலனியில் வசித்து வரும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதனைடுத்து அவரது மகனுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், அவரின் வீட்டு மேல் மாடியில் வசித்து வந்த குடும்பத்துக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன்தொடர்பில்  இருந்த நபர்களை கண்டறியும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.