புழல் சிறையில் இருந்து டாஸ்மாக் கடைக்கு வந்த மிரட்டல் போன்! – அதிர்ச்சியில் போலீஸ்

புழல் சிறையில் இருந்து டாஸ்மாக் கடைக்கு வந்த மிரட்டல் போன்! – அதிர்ச்சியில் போலீஸ்

புழல் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி, மயிலாடுதுறை டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சிறைச்சாலைகளில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக சிறைத்துறை தலைவர் சில தினங்களுக்கு முன்புதான் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி கப்ரியேல் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

pulal

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக இருக்கும் ரமேஷ்குமார் என்பவர் சிவனேசன் வந்து பேசியுள்ளார். அப்போது, கபிரியேல் பேசுகிறார் என்று போனைக் கொடுத்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர், ரூ.25 ஆயிரத்தைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து ரமேஷ்குமார் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார்.
அதே போல், புது பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றிய சந்திரவேல் என்பவரிடம் சிவனேசன், செல்வம், விஜய் ஆகியோர் சென்று கபிரியேல் சொன்னார் என்று கூறி ரூ.30 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே கத்தியைக் காட்டி மிரட்டி கடையிலிருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு சென்றனர். இது குறித்து சந்திரவேல் புகார் அளித்தார்.

mayil

இந்த புகார்கள் அடிப்படையில் மயிலாடுதுறை போலீசார் சிவனேசன், செல்வம், விஜய், கபிரியேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து சிவனேசன், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். கபிரியேல் புழல் சிறையில் இருப்பது தெரிந்தது. அங்கிருந்து எப்படி கடை மேற்பார்வையாளருக்கு போன் செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளால் மயிலாடுதுறையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, ஊருக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.