புள்ளிங்கோ கெட்டப்பில் மாஸ் காட்டும் ரம்யா பாண்டியன்

 

புள்ளிங்கோ கெட்டப்பில் மாஸ் காட்டும் ரம்யா பாண்டியன்

பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின்  மூலம் நுழைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். பட வாய்ப்பு இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள்  சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக மாறியது. 

ramya

இந்நிலையில், ரம்யா பாண்டியன் கிராப் கட்டிங்கில் நியூ கெட்டப்பிற்கு  மாறியுள்ள புகைப்படம் ஒன்று வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இதை கண்ட ரம்யாவின் ரசிகர்கள் அவர் புள்ளிங்கோ கெட்டப்பிற்கு  மாறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் லைக்ஸை கொட்டி தீர்க்கின்றனர்.

ramya

ஆனால்  இது உண்மையில் விக் தான். புள்ளிங்கோ கெட்டப்புக்காக முடியை வெட்டவில்லை என்று ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.