புல்வாமா தாக்குதல்; இந்தியா-பாக்., வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள்!

 

புல்வாமா தாக்குதல்; இந்தியா-பாக்., வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள்!

புல்வாமா தாக்குதலில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாட்களும் தங்களது வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது

பீய்ஜிங்: புல்வாமா தாக்குதலில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாட்களும் தங்களது வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் சிறை பிடிக்கப்பட்டது என இரு நாடுகளுக்கும் இடையே அமைதியின்மை நிலவி வருகிறது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாட்களும் தங்களது வேற்றுமைகளை களைய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள விளாடிமர் நோரோவ், பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் எதிரான நிபந்தனையற்ற போராட்டக்க்கான உறுதிப்பாடு இல்லாமல் இருந்தால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான இந்த இரு நாடுகளின் பங்களிப்பு சாத்தியமற்றதாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமைதிக்கு எதிரானவர்களின் தூண்டுதலின் பெயரில் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ள விளாடிமர் நோரோவ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இரு தரப்பு வேறுபாடுகளை அமைப்பின் குடும்பதினுள் கொண்டு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இரு நாடுகளும் பரஸ்பர சமரசம் மூலம் பிரச்னைகளை தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முக்கியமான நிபந்தனைகளுள் ஒன்று, பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நிபந்தனையற்ற மற்றும் உறுதியான போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு ஆகும். இது இல்லை என்றால் இந்த இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் பலம் பொருந்திய அமைப்பாகக் கருதப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை கடந்த 2001-ஆம் ஆண்டில் சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளை கொண்டு தொடங்கப்பட்டது. அதில், கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் உறுப்பினர்களாக இணைந்தன.