புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சஜாத்கான் டெல்லியில் கைது

 

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சஜாத்கான் டெல்லியில் கைது

புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

டெல்லி : 

நாட்டையே உலுக்கிய புல்வாமா தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

புல்வாமா தாக்குதல் 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 – ஆம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது 350 கிலோ வெடிபொருள் நிரப்பிய காரை மோதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

pulwama attack

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய பாகிஸ்தான் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது. சமீப காலமாக தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் அத்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது. 

பயங்கரவாதி கைது 

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த மாதம் 26-ஆம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.

pulwama attack

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி சஜத்கான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிரின் நெருங்கிய நண்பன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.