புல்லட் ரயில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதைக் காட்டிலும் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது முக்கியமா? – பிரியங்கா காந்தி கேள்வி

புல்லட் ரயில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதைக் காட்டிலும் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது முக்கியமா? – பிரியங்கா காந்தி கேள்வி

புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ.1.25 லட்சம் கோடி, புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்வதைக் காட்டிலும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தது அவசியமானதா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

bullet-train-7

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
“அரசு ஊழியர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை படி உயர்வை ரத்து செய்ததில் என்ன லாஜிக் உள்ளது? இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், போலீசார் உள்ளிட்ட பணியார்களின் அகவிலைப்படியை பறித்துக் கொண்டதில் என்ன காரணம் என்னது? மூன்றாம், நான்காம் நிலை ஊழியர்கள் இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்வார்கள். ஓய்வூதியத்தை நம்பியுள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்களா?

ஏன் அரசு தன்னுடைய தேவைக்கு அதிகமான செலவை நிறுத்தக் கூடாது? அரசின் செலவில் 30 சதவிகிதம் குறைக்கப்படும் என்று ஏன் அறிவிக்கக் கூடாது? ரூ.1.25 லட்சம் கோடியில் மேற்கொள்ளப்படும் புல்லட் ரயில் திட்டம், ரூ.20 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்படும் புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமானப் பணி உள்ளிட்ட தற்போதைக்கு தேவையற்ற பணிகளை ஏன் நிறுத்தக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.