புற ஊதா கதிர்கள் கொண்டு மருத்துவமனைகளை சுத்தப்படுத்த மத்திய அரசு திட்டம்!

புற ஊதா கதிர்கள் கொண்டு மருத்துவமனைகளை சுத்தப்படுத்த மத்திய அரசு திட்டம்!

புற ஊதா கதிர்கள் கொண்டு மருத்துவமனைகளை தூய்மை படுத்தலாம் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

புற ஊதா கதிர்கள் கொண்டு மருத்துவமனைகளை தூய்மை படுத்தலாம் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

200 முதல் 300 NM வரையிலான அலைவரிசையில் புற ஊதா கதிர்களை பயன்படுத்தும்பொழுது நுண்ணிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காற்று மற்றும் தரை சுவர் போன்ற இடங்களிலிருந்து அகற்ற முடியும் என்றும் ரசாயன கிருமிநாசினி மருத்துவமனைகள் மற்றும் அதிதீவிர பகுதிகளின் சுற்றுப்புறங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நீக்குவதற்கு போதுமானதாக இல்லை என்றும் மத்திய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே புற ஊதா கதிர்கள் மூலம் இயங்கும் ட்ராலி போன்ற அமைப்பின் மூலம் எளிதாக கிருமிகளை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UV disinfection trolley

வைரஸ் தொற்றுக்கு ஆளான நோயாளிகள் இருந்த அறை அவர்கள் பயன்படுத்திய படுக்கை உள்ளிட்டவற்றை இதன் மூலம் எளிமையாக தூய்மைப்படுத்த முடியும். ஐந்தடி உயரமுள்ள இந்த ட்ராலியை 400 சதுர அடி உள்ள அறையில் 30 நிமிடங்கள் வைக்கும் பட்சத்தில் 99 சதவிகித கிருமிகள் அழிந்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது