புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியைத் தானமாக வழங்கிய 1,300 மாணவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!

 

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியைத் தானமாக வழங்கிய 1,300 மாணவிகள் : நெகிழ்ச்சி சம்பவம்!

புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்.4 ஆம் தேதி  புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்.4 ஆம் தேதி  புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, விக் தயாரிக்கும் நிறுவனங்கள் பெண்களிடம் முடியைத் தானமாகப் பெறுவர். அதே போல, நேற்று  திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. அதில், சுமார் 1300 மாணவிகள் தங்கள் முடியைத் தானமாகக் கொடுத்துள்ளனர். 

ttn

இது குறித்த பேசிய அந்த தனியார் நிறுவன அதிகாரி, ‘புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் சம்மதத்துடன் பிப்.4 ஆம் தேதி முதல் மார்ச்.4 ஆம் தேதி வரை முடியைத் தானமாகப் பெற்று அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விக் செய்து இலவசமாகக் கொடுத்து வருகிறோம். சென்னை போன்ற பெரு நகரங்களில் முடியைத் தலைமுடி தானம் பெறும் நிகழ்ச்சி நடாத்தியுள்ளோம். ஆனால் திருச்சியில் நடத்துவது இதுவே முதன் முறை. குறைந்த பட்சம் 10இன்ச் முடியைத் தானமாக பெறுகிறோம்” என்று கூறினார். நல்ல நோக்கத்திற்கு முடியைக் கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.