புரோட்டா, பஜ்ஜி சுடும் வினோத எம்பி வேட்பாளர்: மாஸ்டர் பிளான் ஒர்க்-அவுட் ஆகுமா?!

 

புரோட்டா, பஜ்ஜி சுடும் வினோத எம்பி வேட்பாளர்: மாஸ்டர் பிளான் ஒர்க்-அவுட்  ஆகுமா?!

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். தெருவை சுத்தம் செய்வது, வயதானவர்களுக்கு உதவுவது என பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்களிக்கும்படி வேண்டுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், ஓட்டு சேகரிக்க வித்தியமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மன்சூர் அலிகான் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். தெருவை சுத்தம் செய்வது, வயதானவர்களுக்கு உதவுவது என பல்வேறு டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்களிக்கும்படி வேண்டுகிறார். இதன் அடுத்தகட்டமாக சமையல் மாஸ்டராக மாறியிருக்கிறார்.

man

நத்தம், செந்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், புரோட்டா கடை ஒன்றில் புகுந்து புரோட்டா வீசினார். பின்னர் அதனருகே உள்ள பஜ்ஜி கடையில் பஜ்ஜி சுட்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

manu

மன்சூர் அலிகானின் இந்த டெக்னிக்குக்கு ஒருபுறம் வரவேற்பு இருக்கிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் அவரை கலாய்க்கவும் செய்கின்றனர். இந்தத் தேர்தல் மனுசன என்ன பாடு படுத்துது. மன்சூர் அலிகானின் மாஸ்டர் பிளான் ஒர்க் ஆகுதானு பொறுத்திருந்து பார்ப்போம்.

 

இதையும் வாசிங்க

தமிழ்படம் சிவா பாணியில் ஓ.பி.எஸ்.-சை கலாய்த்த மு.க.ஸ்டாலின்