புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் உதய குமார் பேட்டி

 

புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளது:  அமைச்சர் உதய குமார் பேட்டி

பருவ மழையின் போது பாதிக்கப் படக் கூடிய 4,299 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை காப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் புயலை எதிர்க்கொள்ள  தமிழகம் தயார் நிலையில் உள்ளது

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கையையடுத்து, புயலை சந்திக்க தமிழகம் தயாராக உள்ளது என்று அமைச்சர் உதய குமார் கூறியுள்ளார். 

Minister Udaya kumar

இன்று காலை மத்திய மேற்கு கடற் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வட  மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதய குமார், தமிழகம் முழுவதும் ரூ.500 கோடி செலவில் ஏரிகள், குளங்கள், கன்மாய்களை தூர்வாரும் பணி துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், பருவ மழையின் போது பாதிக்கப் படக் கூடிய 4,299 இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களை காப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் புயலை எதிர்க்கொள்ள  தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.