புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் சன்னி லியோன்? ரசிகர்கள் உற்சாகம்!

 

புத்தாண்டு கொண்டாட்டம்:  சென்னையில் சன்னி லியோன்? ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், புத்தாண்டையொட்டி சென்னையில் கவர்ச்சி நடனமாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், புத்தாண்டையொட்டி சென்னையில் கவர்ச்சி நடனமாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாச படங்களை தவிர்த்து பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய ரசிகர்களுக்காக முழு நீள தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வரலாற்றுச் சரித்திர படமாக உருவாகி வரும் ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சன்னி லியோன் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அவருடன் பாலிவுட் பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகளும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சன்னிலியோனின் சென்னை வருகையால் அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். முன்னதாக பெங்களூருவில் நடைபெற இருந்த  ‘சன்னி நைட் இன் பெங்களூர்’ என்ற நிகழ்ச்சிக்கு  சில கன்னட அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.