புத்தாண்டில் 10 ரூபாய்க்கு சென்னை சுற்றுலாத் தலங்களை ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம் !

 

புத்தாண்டில் 10 ரூபாய்க்கு சென்னை சுற்றுலாத் தலங்களை ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம் !

இப்போதிலிருந்தே மக்கள், புத்தாண்டுக்கு எங்கே செல்லலாம் என்று பிளான் போட ஆரம்பித்திருப்பார்கள்.

புத்தாண்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளது. இப்போதிலிருந்தே மக்கள், புத்தாண்டுக்கு எங்கே செல்லலாம் என்று பிளான் போட ஆரம்பித்திருப்பார்கள். அதனால், மக்களின் இந்த புத்தாண்டை இன்னும் சிறப்பாக்கத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை முழுவதும் மிகக் குறைவான கட்டணத்தில் சுற்றிப் பார்க்கலாம் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

tthj

இது தொடர்பாகச் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ரூ.10 கட்டணத்தில் சென்னையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றிப் பார்க்கலாம். புத்தாண்டு தினத்தன்று மட்டும் இந்த சிறப்புச் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. புத்தாண்டு அன்று திருவல்லிக்கேணி  சுற்றுலாக்களாக அலுவலக வளாகத்திலிருந்து 15 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். 

ttn

அதில், ரூ.10 கட்டணத்தில் சுற்றுலாப் பொருட்காட்சி, மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பேருந்துகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும். 

ttn

அந்த பேருந்துகளில், பயணிகள் ஒரு சுற்றுலா தளத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தளத்திற்குச் செல்லும் வழியில் எங்கு வேண்டுமானாலும், ஏறலாம் அல்லது இறங்கலாம். இது தொடர்பான விவரங்களை அறிய, 044-25333333, 25333857, 25333850 ,1800 42531111 ஆகிய எங்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.