புத்தாடையொட்டி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பூஜை: பக்தர்களுக்கு அனுமதியில்லை!

 

புத்தாடையொட்டி நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பூஜை: பக்தர்களுக்கு அனுமதியில்லை!

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வழிபாட்டு தலங்கள்  கூட மூடப்பட்டுள்ளது. 

 ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டன்று நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடைகிறது. இருப்பினும் மீண்டும் நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் ஒருவருக்கு  ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வழிபாட்டு தலங்கள்  கூட மூடப்பட்டுள்ளது. 

ttcc

இந்நிலையில் நாளை  சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் காலையில் நெல்லையப்பர்  சுவாமி- ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகமும், இரவு 7 மணிக்கு புதிய வருடத்துக்கான பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெறுகிறது.

ttn

இருப்பினும் கொரோனா தொற்றால்  பக்தர்களுக்கு அனுமது இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொள்வர் என்றும் அவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.