புத்தகங்களின் மீதுள்ள தீரா காதல்… நூலகம் நடத்தும் 12 வயது சிறுமி! 

புத்தகங்களின் மீதுள்ள தீரா காதல்… நூலகம் நடத்தும் 12 வயது சிறுமி! 

புத்தகங்களின் மீதுள்ள காதலால்  ‘யசோதா நூலகம்’ என்ற பெயரில் கேரளாவில் உள்ள ஒரு சிறுமி ஒருவர் நூலகம் நடத்தி வருகிறார். 

புத்தகங்களின் மீதுள்ள காதலால்  ‘யசோதா நூலகம்’ என்ற பெயரில் கேரளாவில் உள்ள ஒரு சிறுமி ஒருவர் நூலகம் நடத்தி வருகிறார். 

கொச்சியில் அமைந்துள்ளது ‘யசோதா நூலகம்’. இந்த நூலகத்தில் 3,500 புத்தகங்கள் உள்ளன. மேலும் உறுப்பினர்களாக மொத்தம் 110 பேர் உள்ளனர். எனது நூலகத்தில் 2,500 மலையாள மொழி புத்தகங்களும், 1,000 ஆங்கில புத்தகங்களும் உள்ளன என நூலகத்தை நடத்திவரும் யசோதா தெரிவிக்கிறார். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக புத்தகங்களை படித்துச்செல்லலாம் என்றும் கூறுகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்,  சிலர் நூலகத்திற்கு புத்தகங்களை 
இலவசமாக வழங்கி வருகின்றனர்  என்று தெரிவிக்கிறார். 

3 வது படிக்கும் போதிலிருந்து புத்தகங்கள் மீதுள்ள தீரா காதலால் பல புத்தகங்களை வாங்கி குவித்துள்ளார். ஒருமுறை நூலகத்தில் வாங்கிய புத்தகத்தை திருப்பி அளிக்க தாமதம் ஆனதால் அவர் அபராத தொகை செலுத்த நேர்ந்தது. இதனால் காசே இல்லாத ஏழை மக்கள் எப்படி புத்தகம் படிப்பார்கள் என்று எண்ணிய யசோதா, இலவச நூலகத்தை ஆரம்பித்துள்ளார்.