புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்..?  கிரண்பேடியின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது

 

புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்..?  கிரண்பேடியின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவிக்கு வந்தார். கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு வந்த தினத்தில் இருந்தே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எல்லா விஷயங்களிலும் மோதல் போக்கு ஏற்பட்டது. மாநில நிர்வாக விஷயங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று முதல்வர் எதிர்ப்பு

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவிக்கு வந்தார். கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு வந்த தினத்தில் இருந்தே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் எல்லா விஷயங்களிலும் மோதல் போக்கு ஏற்பட்டது. மாநில நிர்வாக விஷயங்களில் ஆளுநர் தலையிடக் கூடாது என்று முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

kiran bedi

ஆனால், இவை எதையும் பொருட்படுத்தாமல், மாநில நிர்வாக விஷயங்களில் தலையிட்டு, புதுச்சேரியை மேம்படுத்துவதே தன் லட்சியம் என்று அதிரடியாய் களத்தில் இறங்கி நிறைய மாற்றங்களையும், புதிய விதிமுறைகளையும் கிரண்பேடி கொண்டு வந்திருந்தார். முதல்வர் நாராயணசாமிக்கும், துணை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் இருந்து வந்த மோதல் போக்கினால், யார் சொல்வதைக் கேட்பது என்பதில் அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர்.

narayana samy

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்வாக விவகாரத்தில் கிரண்பேடி தலையிடக் கூடாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்தார். கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.