புதுச்சேரி ஊரடங்கில் தளர்வால் 50% உணவகங்கள் திறப்பு!

 

புதுச்சேரி ஊரடங்கில் தளர்வால் 50% உணவகங்கள் திறப்பு!

புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் படி புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டுள்ளன. 

ttn

அதாவது, வேளாண் தொழில், பெட்ரோல் பங்க், சரக்கு போக்குவரத்துக்கு , பிளம்பர், எலக்ட்ரீசியன், உணவகங்கள்  உள்ளிட்ட பணிகள் இயங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகாரணங்கள் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல சமூக விலகலுடன் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரியில் 50% உணவகங்கள் திறக்கப்பட்டு, பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.