புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

 

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 ஊரடங்கு உத்தரவு

இந்நிலையில் புதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை முதல் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.இந்த குறிப்பிட்ட நாளில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.