புதுச்சேரியிலும் ஏப்.30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

 

புதுச்சேரியிலும் ஏப்.30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் பெரும்பான்மையான மக்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான். 

police

தென்னிந்தியாவிலேயே கொரோனா வைரஸ் குறைவாக பரவியுள்ள பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

.