புதுசா வேலைக்கு ஆள் , பதவி உயர்வு கிடையாது…. ஏர் இந்தியா விற்பனைக்கு ரெடி

புதுசா வேலைக்கு ஆள் , பதவி உயர்வு கிடையாது…. ஏர் இந்தியா விற்பனைக்கு ரெடி

அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது. தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்தால் மத்திய அரசுக்கு லாபத்தை கொடுக்க முடியவில்லை. மேலும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் கடனை மட்டுமே தன் வசம் வைத்துள்ளது.

air india

தொடர்ந்து ஏர் இந்தியாவை நாம செயல்படுத்தினால் நமக்குதான் நஷ்டம் அதனால பேசாமல் தனியாருக்கு விற்று விடுவோம் என மத்திய அரசு முடிவு எடுத்தது.அதனையடுத்து கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 74 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முன்வந்தது. ஆனால் ஏர் இந்தியாவின் கடன் மற்றும் சில விதிமுறைகளால் யாரும் வாங்க முன்வரவில்லை.

air india

இதனையடுத்து தற்போது ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது பணியாளர்களுக்கு புரமோஷனை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல். இது குறித்து அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட உள்ளதால், புதிய ஆட்கள் நியமனம் செய்வதும், பணியாளர்களுக்கு புரமோஷனும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள என்று கூறினார்.