புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது

 

புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது

ஹூவாய் ஹானர் பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் தொடர்பான விவரங்கள் கசிந்துள்ளது.

பெய்ஜிங்: ஹூவாய் ஹானர் பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் தொடர்பான விவரங்கள் கசிந்துள்ளது.

ஹுவாய் ஹானர் பிராண்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது. சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

ஹானர் 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. + 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்

– 3 ஜி.பி. ரேம்

– 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0

டூயல் சிம் ஸ்லாட்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 8 எம்.பி. செல்ஃபி கேமரா

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.