புதிய வாகன சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்!

புதிய வாகன சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்!

மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி அபராத தொகையானது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு  நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி  அறிவித்துள்ளார்.

mamta

இந்நிலையில், ‘மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்களின் மீது அதிக சுமையைத் திணிப்பது போல அரசு அதிகாரிகள் நினைப்பதால் இந்த சட்டத்தை அமல்படுத்தப்படமாட்டோம்’ என்றார். 

tarffic

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்த்தோம். பணம் என்பது ஒரு தீர்வு கிடையாது. இதை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். இங்கு ஏற்கனவே சேஃப் டிரைவ் சேவ் லைஃப் என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். இதனால் இங்கு விபத்துகள் குறைந்துள்ளன’ என்றார்.