புதிய நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்தினால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும்! – சு.சாமி அட்வைஸ்

புதிய நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்தினால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும்! – சு.சாமி அட்வைஸ்

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதை நிறுத்தினால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும், அதை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதை நிறுத்தினால் ரூ.25 ஆயிரம் கோடி கிடைக்கும், அதை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

su-samy

நாடே கொரொனா பீதியில் உள்ள நேரத்தில், புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. கொரோனா தீவிரம், ஊரடங்கு என்று மக்கள் அச்சத்திலிருந்ததால் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கியது பற்றிய செய்தி பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு நிதி திரட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கை வைத்துள்ளது பா.ஜ.க அரசு.

new-parliment-building

இதற்கு நாடு முழுவதும் இருந்து எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரும் நியமன எம்.பி-யுமான சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தை பிடித்தம் செய்வதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ரூ.25,000 கோடியில் புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தை ஓராண்டுக்காவது ஒத்திவைக்கலாம் என்று கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.