புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை மையம்… கருணாநிதி மகிழ்ந்திருப்பார்! – தங்கம் தென்னரசு உருக்கம்

 

புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை மையம்… கருணாநிதி மகிழ்ந்திருப்பார்! – தங்கம் தென்னரசு உருக்கம்

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடம் அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 300 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக அது மாற்றப்பட்டுள்ளது. இந்த செய்தியை கருணாநிதி கேட்டிருந்தால் மகிழ்ந்திருப்பார் என்று முன்னாள் அமைச்சரும் புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டவருமான தங்கம் தென்னரசு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடம் அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 300 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக அது மாற்றப்பட்டுள்ளது. இந்த செய்தியை கருணாநிதி கேட்டிருந்தால் மகிழ்ந்திருப்பார் என்று முன்னாள் அமைச்சரும் புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டவருமான தங்கம் தென்னரசு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்கம் தென்னரசு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள மலரும் நினைவுகள்…
“தலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம் உள்ளடக்கிய தலைமைச் செயலகப் புதிய கட்டடம் தற்போது 300 படுக்கைகளுடனான கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக இயங்குகிறது என்ற செய்தியைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

tn-legislate
அவரது வீட்டையே மருத்துவமனையாக்கிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த அவர் இன்றிருந்தால், தான் எழுப்பிய இந்த மாபெரும் கட்டடம் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக மாறி இருப்பதில் மகிழ்ச்சியே அடைந்திருப்பார்.
ஒரு நாள் திடீரென என்னிடத்தில் கேட்டார்.
“ என்னய்யா, மேலே இருக்கும் தளங்களில் எல்லாம் வேலை முடிஞ்சிருச்சா?”
“ முடிஞ்சிருச்சுங்கய்யா.. சில சின்ன வேலைகள் தான் பாக்கி”.
சம்பிரதாயமாகச் சொன்னேன்.
“ சரி, அப்போ வா! போய்ப் பார்க்கலாம்”
“ இல்லீங்க அய்யா, ஒரே தூசி..சுத்தம் பண்ணிட்டு நாளைக்குப் போகலாம்”
“ தூசிதானே..முகக்கவசம் போட்டுக்கிட்டா போச்சு.. வாய்யா” யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக மேல் தளத்தைப் பார்வையிடக் கிளம்பிவிட்டார். அவர்தான் கலைஞர்!
அப்படி அவர் பார்த்து பார்த்துக் கட்டியது தான் கொரானா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக இன்று உயிர் காக்க உதவுகின்றது” என்று கூறியுள்ளார்.

நீங்கள் கட்டியது தலைமைச் செயலக கட்டிடம் மட்டும்தான், நாங்கள்தான் அதை மருத்துவமனையாக மாற்றினோம் என்று அ.தி.மு.க-வினர் கம்பு சுத்தி வருகின்றனர். யார் எதுவாக மாற்றினால் என்ன, கட்டிடம் கட்டியது நாங்கள்… அதை மாற்றித்தான் பயன்படுத்துகின்றீர்களே தவிர, புதிதாக நீங்கள் கட்டியது என்று ஒன்றும் இல்லை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர் தி.மு.க-வினர்.