புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: மூன்று நாட்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்!

 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: மூன்று நாட்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்!

நாளை முதல் வரும் 8 ஆம் தேதி வரை மீனவர்கள், மத்திய கிழக்கு வங்கக் கடல்  பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்

சென்னை: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

rain

 

தமிழகத்தில் வடகிழக்குப்பருவ மழை தொடங்கியுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வருகிறது.  இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

met

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக  மாறும் என்றும் இதனால் வருகின்ற நாளை முதல் வரும் 8 ஆம் தேதி வரை மீனவர்கள், மத்திய கிழக்கு வங்கக் கடல்  பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். 

rain

முன்னதாக டெல்லி காற்று மாசு சென்னையை தாக்காது என்றும் ஒருவேளை அப்படி சென்னையில் காற்று  மாசுபாடு ஏற்பட்டால் கூட அதை ஈரப்பதம் கட்டுப்படுத்தும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.