புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா…முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்!

 

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா…முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்!

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். 

தமிழகத்தில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்கி மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  

ttn

 

இந்நிலையில் மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை மருத்துவக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் அவர் மார்ச் 4 ஆம் தேதி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரிக்கும் 5-ம்தேதி நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்ட இருக்கிறார். 

ttn

அத்துடன்  மார்ச் 5ம் தேதி கரூர் மற்றும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கும், 7-ம்தேதி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 8ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல்  நாட்டவுள்ள முதல்வர்  14-ஆம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் அடிக்கல்  நாட்டு விழாவில் பங்கேற்கிறார். என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.