புகை பிடித்து டகால்டி வேலை காட்டும் சந்தானம்! 

 

புகை பிடித்து டகால்டி வேலை காட்டும் சந்தானம்! 

நடிகை சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி படத்தின் ஃபாரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

சென்னை: நடிகை சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி படத்தின் ஃபாரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் பெற்ற நடிகர்களுள் ஒருவர் தான் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதைத்தொடர்ந்து தற்போது A1 படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவர் தற்போது விஜய் ஆனந்த் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டிலை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். 

இந்த படத்திற்கு ‘டகால்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் இதில் சந்தானம் நண்பராக யோகிபாபு நடித்து வருகிறார். சந்தானமும் யோகிபாபுவும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்ளும் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இதில் சந்தானம் புகை பிடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.