புகைப்பிடித்தால் ஸ்பாட் ஃபைன்! அதிகாரிகளின் கழுகு பார்வையில் நெல்லை!

புகைப்பிடித்தால் ஸ்பாட் ஃபைன்! அதிகாரிகளின் கழுகு பார்வையில் நெல்லை!

நெல்லை மாநகரில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை : மீறினால் ரூ.200 அபராதம் என மாநகராட்சி கடும் எச்சரிக்‍கை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிகாரிகள் அந்த அறிவிப்பை அப்படியே புகையைப் போல காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள்.

tirunelveli

இந்நிலையில் திருநெல்வேலியில், இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமுலுக்கும் வந்துள்ளது. 
நெல்லை மாநகராட்சியில் பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் திருநெல்வேலி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோவில்கள், மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முதல் புகைப்பிடித்தால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து. அதன்படி இந்த பகுதிகளில்  அதிகாரிகள் ஆய்வும் நடத்தினார்கள். மாநகராட்சியின் அறிவிப்பையும் மீறி பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் இன்று அபாராத தொகையும் வசூலிக்கப்பட்டு ரசீதும் கொடுக்கப்பட்டது.

smoking

தமிழகத்திலேயே பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் வசூலித்து ரசிது தருவதுடன் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதில் நெல்லை மாவட்டம் முன்மாதிரியாக இருப்பதாக பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவித்தனர்.