புகைப்படங்களை அழகாக்கும் ‘ஸ்டுடியோ மோடு’ அம்சத்துடன் லாவா Z81 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

புகைப்படங்களை அழகாக்கும் ‘ஸ்டுடியோ மோடு’ அம்சத்துடன் லாவா Z81 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஸ்டுடியோ மோடு அம்சத்துடன் லாவா Z81 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: இந்தியாவில் ஸ்டுடியோ மோடு அம்சத்துடன் லாவா Z81 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி லாவா Z81 என்ற ஸ்மார்ட்போன் ‘ஸ்டுடியோ மோடு’ அம்சத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ தொழில்நுட்பம்) கொண்டு புகைப்படங்களை அழகாக்க முடியும். மேலும், புகைப்படங்களுக்கு வித்தியாசமான லைட்டிங்குகளை அளிக்க முடியும். லாவா Z81 ஸ்மார்ட்போன் 2 ஜிபி மற்றும் 3 ஜிபி என இரு வகையான ரேம்களில் வெளியிடப்பட்டுள்ளது.

லாவா Z81 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் எச்.டி டிஸ்பிளே

ஹீலியோ ஏ22 குவாட்கோர் பிராசஸர்

– 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம்

– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

ஆண்ட்ராய்டு 8.1 ஸ்டார் ஓ.எஸ் 5.0 இயங்குதளம்

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 13 எம்.பி. செல்ஃபி கேமரா

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 டிஸ்பிளே

டூயல் சிம் ஸ்லாட்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

– 3000 எம்.ஏ.எச் பேட்டரி

லாவா Z81 ஸ்மார்ட்போன் விலையை பொறுத்தவரை 3 ஜிபி மாடல் ரூ.9,499 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 2 ஜிபி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.