புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக பேச முடியாதா: போலீசாருக்கு ராஜ்நாத் சிங் சரமாரி கேள்வி

 

புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக பேச முடியாதா: போலீசாருக்கு ராஜ்நாத் சிங் சரமாரி கேள்வி

புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அமைதியாக பேச முடியாதா என காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்

டெல்லி: புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அமைதியாக பேச முடியாதா என காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி போலீசாருக்கு ரோந்து வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காவல் நிலையம் மற்றும் போலீசார் நடந்து கொள்ளும் முறை குறித்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் அமைதியாக, மரியாதையாக பேச முடியாதா? நீண்ட நேரம் காத்திருந்தால் அவர்களுக்கு நம்மால் தண்ணீர் வழங்க முடியாதா? என சரமாரியான கேள்விகளை எழுப்பிய ராஜாந்த் சிங், பொது மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த போலீசார் கவனம் செலுத்த வேண்டும். உதவிக்காக காவல் நிலையம் வருபவர்களை கவுரவத்துடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.